நடிகராக களமிறங்கும் ஹெச்.ராஜா! ஒரு வாரத்தில் திரைக்கு வரும்....!
பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, அரசியலைத் தொடர்ந்து, திரையுலகிலும் கால் பதிக்க, களமிறங்கியுள்ளார்.
அவர் நடிக்கும் படத்துக்கு, கந்தன் மலை என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை, நெல்லையில் படக்குழு வெளியிட்டது. அறிமுக இயக்குநர் வீரமுருகன் இயக்கும் இந்தப் புதிய படத்தில், பிரதான கதாபாத்திரத்தில் ஹெச். ராஜா நடிக்கிறார். திருப்பரங்குன்றம் பின்னணியில் உருவாகி வரும், கந்தன் மலை திரைப்படத்தை சிவ பிரபாகரன் - சந்திரசேகர் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், எச். ராஜா நடிக்கும் கந்தன் மலை என்ற திரைப்படம் ஒரு வாரத்தில் திரைக்கு வரும் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெற்ற விருந்தில் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, பாஜக பிரமுகர்கள் மற்றுமல்லாமல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பாஜகவின் எச். ராஜா நடித்த கந்தன் மலை என்ற திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு விழா அங்கு நடைபெற்றது.