\
G.R Swaminathan Attacks S. Venkatesan, Calls Him a Luxury Communist MP
சு. வெங்கடேசன் - ஜி.ஆர் சுவாமிநாதன் Politalks

”ஆடம்பர கம்யூனிஸ்ட் எம்.பி.” - சு. வெங்கடேசன் குறித்து ஜி.ஆர். சுவாமிநாதன் தாக்கு!!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை ’ஆடம்பர கம்யூனிஸ்ட் எம்.பி.’ என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விமர்சித்துள்ளார். இதுகுறித்துப் பார்க்கலாம்.
Published on: 

சிந்தை இணையதளத்தில் வெளியான எழுத்தாளர் பெருமாள் முருகனின் கட்டுரையின் மூலம், பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு விவாகாரம் தேசிய அளவில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதையடுத்து, புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஜி.ஆர் சுவாமிநாதன்
ஜி.ஆர் சுவாமிநாதன் Money Control

இந்தச்சூழலில் தான், கடந்த நவம்பர் 11-ம் தேதி நடந்த ’மகா பெரியவா’ புத்தக வெளியீட்டு விழாவில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் கலந்து கொண்டார். அப்போது, நூலக புத்தக கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது. அந்த பாவாத்தைப் போக்க வேண்டுமென்றால், ரேக்குகளில் ’மகா பெரியவா’ புத்தகங்களை அடுக்க வேண்டும் என நகைச்சுவையாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் கருத்துக்கு பதிலளித்த மதுரை கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன், நூலகக் கொள்முதலில் நடைபெற்றிருப்பது ஊழல் என்றும், அதற்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், பாவம், புண்ணியம் குறித்துப் பேசுவது நீதிபதிகளின் வேலையல்ல எனவும் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் தான், அதற்கு பதிலடியாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை ’ஆடம்பர கம்யூனிஸ்ட் எம்.பி.’ என நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள அவர், நான் எப்படி பேச வேண்டும் என எனக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ரயில் நிலையத்திலிருந்து செல்லும் போது, உயர் ரக காரில், ஆடம்பர உடையில் ஒருவர் இறங்கினார். யாரோ என நினைத்த போது.. எம்.பி வெங்கடேசன் வந்தார். அவர் முதல் வகுப்புக்கு செல்ல நான் சாதாரண வகுப்பில் பயணித்தேன். ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார். புத்தக ராயல்டி வருமானத்தால் மட்டுமே இந்த வசதி கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்று பேசலாமா?" எனத் தெரிவித்துள்ளார்.

G.R Swaminathan Attacks S. Venkatesan, Calls Him a Luxury Communist MP
14 ஆண்டு திருமண வாழ்க்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி பிரிவதாக அறிவிப்பு! என்ன காரணம்?