ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தென் மாவட்ட மழை பாதிப்பு மீட்புப் பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைப்பினைப் பற்றி குற்றம் தெரிவித்தது ஏற்புடையது இல்லை” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசுபுதிய தலைமுறை

தென் மாவட்ட மழை பாதிப்பு மீட்புப் பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆளுநர் தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைப்பினைப் பற்றி குற்றம் தெரிவித்தது ஏற்புடையது இல்லை என்று கண்டனம் தெரிவித்து, ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசுpt web

மாநில அரசு மீதான ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய தலைமுறையிடம் பேசுகையில், “ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகளோடு மாநில ஆளுநர் ஒரு கூட்டத்தினை நடத்தினார். அதில் மீட்பு பணிகளில் தமிழ்நாடு அரசு மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். இது முற்றிலும் ஏற்புடையது அல்ல. தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒன்றிய அரசின் பல்வேறு அமைப்புகளோடு மாநில அரசுக்கு நல்ல ஒரு தொடர்பு இருந்துவந்தது.

குறிப்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தோடு தொடர்ச்சியாக விவரங்கள் கேட்டறியப்பட்டு தகவல்கள் தெரிவிக்கப்பட்ட வண்ணம் இருந்தது. மேலும் பல்வேறு அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்களும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
தூத்துக்குடியில் நாளை முதல்வர் ஆய்வு; மத்தியக்குழு இன்று ஆய்வு

அதுமட்டுமல்லாது 1.14 கோடி முன்னெச்சரிக்கை அலர்ட் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. மேலும் வெள்ளம் சூழ்ந்திருந்த இடங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள இராணுவம், கடற்படை போன்ற அமைப்புகளுடன் பேரிடர் மீட்பு குழுக்கள் தொடர்பிலே இருந்து இவர்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியது. முக்கியமாக மீட்பு துறையினர் தங்களை முழுவதுமாக இப்பணிகளில் ஈடுபடுத்தி கொண்டனர்.

மேலும் ஹெலிகாப்டர் அனுப்பி விமானப்படை உதவியது. இப்படி இவ்வளவு பேர் களத்தில் இருந்து பணிகள் பல செய்தும் ஆளுநர் இவ்வாறு தெரிவித்திருப்பது ஏற்புடையது இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com