தூத்துக்குடியில் நாளை முதல்வர் ஆய்வு; மத்தியக்குழு இன்று ஆய்வு

தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்கிறார்.

தூத்துக்குடியில் நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்கிறார். டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற I.N.D.I.A கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதன்தொடர்ச்சியாக இரவு பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழக மழை பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கினார்.

இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் முதல்வர், மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார். அதன் தொடர்சியாக இரவு மதுரை செல்லும் மு. க.ஸ்டாலின் நாளை தூத்துக்குடியில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்துகிறார். தூத்துக்குடியில் மத்தியக்குழு இன்று ஆய்வு நடத்த உள்ளதால் முதலமைச்சர் ஆய்வு வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com