”மக்களை தூண்டிவிட்டே ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்திருக்கிறார்கள்” - ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சால் பரபரப்பு!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதனை மூட வைத்திருக்கிறார்கள் என பேசியிருக்கிறார் ஆளுநர் ரவி.
Governor R N Ravi | Sterlite
Governor R N Ravi | SterliteTwitter

இந்திய குடிமை பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்ற ஆளுநரின் ' எண்ணித் துணிக' நிகழ்ச்சி சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது அரசியல் தற்போது சர்ச்சையையும், பரபரப்பையும் கிளப்பியிருக்கிறது.

அதில், சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கூடிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்காதது குறித்து பேசியதோடு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு அதனை மூட வைத்திருக்கிறார்கள் என பேசியதும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.

Governor R N Ravi | Sterlite
”ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்ட நாடுதான் இந்தியா” - ஆளுநர் ரவி பேச்சு!

அதன்படி ஆளுநர் ரவி பேசியதன் விவரத்தை காணலாம்:

“நாடு சுதந்திரம் அடைந்த போது நம்மிடம் அனைத்து வசதிகளும் இல்லை. ஆனால் வறுமை ஒழிப்பிற்காக நாட்டின் பல பகுதிகளில் மத்திய மாநில அரசுகள் இலவசங்களை வழங்கிய உள்ளன. ஆனால் இது போன்ற சிலரை திருப்தி செய்யும் குறுகிய கால கொள்கைகள் பயனளிக்காது. இந்தியாவில் நடந்த ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது யாரையும் திருப்திப்படுத்த எதை சார்ந்தும் இல்லாது அனைவருக்குமான அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதுதான் அனைவரும் வளர உதவும்.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு இதற்காக பல கோடி ரூபாய் நிதி நம் நாட்டுக்குள் FCI ஆக அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை, காலநிலை மாற்றம் என பல்வேறு காரணிகளை கூறி நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் நிதிகள் போராட்டங்களில் ஈடுபட பயன்படுத்தப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு 250 கோடி வரையில் இது போன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் விளிஞ்சம் துறைமுகம் கொண்டு வரும்போதும், கூடங்குளம் அணுஉலை வரும்போதும். ஸ்டெர்லைட் எதிராகவும் மக்களை தூண்டவும் இது போன்ற நிதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் வருத்தமானது.

ஆனால், அந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் நாட்டின் மொத்த காப்பர் உற்பத்தியில் 40 சதவிகிதம் அளவுக்கு பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே நிதிகள் வந்துள்ளன. நாட்டில் பல பயங்கரவாத செயலுக்கு அந்த பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து ISIS அமைப்பிற்கு சென்றவர்களில் 90 நபர்களை இந்த அமைப்பு அனுப்பியுள்ளது.” என சற்று காட்டமாகே ஆளுநர் ரவி பேசியிருக்கிறார்.

இதனையடுத்து, ஆரோக்கியத்தை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மொத்தமாக மூடுவதற்கு தன்னெழுச்சியாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை கொடுத்த மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டு நிதிகளால் மக்களை தூண்டிவிட்டு போராட வைத்ததாக ஆளுநர் ரவிக்கு பல சமூக செயற்பாட்டாளர்கள், சூழலியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தத்தம் கண்டனங்களை தெரிவித்திருக்கிறார்கள்.

Governor R N Ravi | Sterlite
”தீர்மானம் நிலுவையில் இருந்தால் அதற்கான அர்த்தம் இதுதான்”- மீண்டும் சர்ச்சைக்கு வித்திடுகிறதா ஆளுநரின் பேச்சு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com