நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது - ஆர்டிஐ தகவல்

நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது - ஆர்டிஐ தகவல்
நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது - ஆர்டிஐ தகவல்

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வழிவகை செய்யும் மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியின் பரிசீலனையில் இருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில அளிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவின் நிலை குறித்தும் அது தொடர்பாக ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்திருக்கும் ஆளுநரின் தகவல் தொடர்பு அதிகாரி எஸ் வெங்கடேஸ்வரன், கோப்பு ஆளுநரின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் அலுவலகம் சார்பில் ஏதேனும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என தமிழ்நாடு முதலமைச்சரின் செயலகம் மற்றும் தலைமை செயலாளர் அலுவலகத்திலும் பிரின்ஸ் கஜேந்திர பாபு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சரியான பதிலளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என தலைமைச் செயலாளரின் அலுவலகம் பதிலளித்துள்ளது. இந்தக் கேள்வியை தலைமைச் செயலாளரின் அலுவலகம் சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைத்தது. சுகாதாரத்துறையோ அதை சட்டத்துறைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com