புதிய தலைமுறை செய்தி எதிரொலி - திருச்செந்தூரில் ஆக்‌ஷன் எடுத்த அரசு... நிம்மதியான பக்தர்கள்!

மழையின்போது திருச்செந்தூரில் சிக்கியிருந்த பக்தர்கள் நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல கட்டணமின்றி பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
திருச்செந்தூர்pt web

தென்தமிழகத்தை மிரட்டிய பெருமழை தூத்துக்குடி மாவட்டத்தையும் வெள்ளக்காடாக மாற்றியது. குறிப்பாக திருச்செந்தூர் நகரத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து முழுவதுமாக முடங்கியது. இதன் காரணமாக திருச்செந்தூர் நகரம் தனித்தீவு போல் காட்சியளித்தது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வந்த வெளியூர் பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.

திருக்கோயிலைச் சுற்றியும் கோயில் வளாகத்திலும் மழைநீர் சூழ்ந்ததால் பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். கடந்த 3 நாட்களாக மின்சாரமும் இல்லாததால், உணவகங்கள் செயல்படவில்லை.

திருச்செந்தூர்
கனமழை எதிரொலி: தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

இதன் காரணமாக வெளியூரில் இருந்து வந்து கோயிலில் சிக்கிய பக்தர்கள் உணவின்றி தவித்தனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மீட்புக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் வழங்கினர். இவர்களின் நிலை குறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது.

அதையடுத்து திருச்செந்தூரில் சிக்கியுள்ள பக்தர்களுக்காக நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு கட்டணமின்றி பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களாக கோவிலில் சிக்கி இருந்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com