மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2576 கோடி கடன் தள்ளுபடி: அரசாணை

மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2576 கோடி கடன் தள்ளுபடி: அரசாணை
மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2576 கோடி கடன் தள்ளுபடி: அரசாணை

மகளிர் சுய உதவிக்குழுவினர் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.2,576 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகையில், 31.03.2021 நிலவரப்படி நிலுவையில் இருக்கும் ரூ.2,756 கோடி கடன்களை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இதுகுறித்து முன் அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது அதனை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாட்டில் மத்தியக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், வேளாண்மை- நபார்டு உள்ளிட்டவை மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் நிலுவைத் தொகையான ரூ.2,755.89 கோடியை அரசே ஏற்றுக் கொண்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கடன் தள்ளுபடிக்கான நிபந்தனைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:

  • கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக் கடன்களில் 31.03.2021 அன்று நிலுவையில் இருந்த அசல், வட்டி மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
  • 31.03.2021 அன்று மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் கணக்கில் ‘நிலுவை நாள்’ முதல் ‘தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்படும் நாள்’ வரை அக்குழுவால் கடன்தொகை பகுதியாக செலுத்தப்பட்டு இருப்பின், அத்தொகை போக எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
  • தள்ளுபடி மற்றும் மானியத் திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டிருப்பின் அரசு மானியம் தவிர்த்து மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை மற்றும் ஆதார் விவரங்களை சரியாக அளிப்பவர்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய தகுதி உடையவர்கள்.
  • அவை இல்லாத மற்றும் போலி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் ஆதார் எண், பான் KYC விவரங்கள் குடும்ப அட்டை தரவுகள் அளிக்காத மற்றும் தரவுகள் சரியாக இல்லாத கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • 31.03.2021 அன்று கடன் நிலுவையாக இருந்து அரசாணை வெளியிடப்படும் நாள் அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அத்தொகை முழுவதும் திரும்பச் செலுத்தப்பட்ட கடன்கள், இத்திட்டத்துக்கு தகுதி பெறாதவையாக கருதப்படும்.
  • கடன் தள்ளுபடி செய்யப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்.
  • ஏற்கனவே பங்குத் தொகை செலுத்தியிருந்து கடன், தள்ளுபடி செய்யப்படும்பொழுது எக்காரணத்தை முன்னிட்டும் பங்குத் தொகையை திரும்ப வழங்கக் கூடாது.
  • ஆதார் அட்டையில் தமிழ்நாடு முகவரி இல்லாமல் பிற மாநிலங்களின் முகவரி கொண்ட ஆதார் அட்டைகள் இருப்பின் அவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.
  • பயனாளிகள் பட்டியல் அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை துறையினரால் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு கையொப்பமிடப்பட்டு ஒப்புதலளிக்கப்பட வேண்டும்.
  • சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட சுய உதவிக்குழு மற்றும் கடன் தள்ளுபடி பெறுவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகள் பட்டியல், ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்திலும் வங்கியிலும் பொதுமக்களுக்கு தெளிவாகத் தெரியும் வகையில் விளம்பரப் பலகையில் பொருத்தி வெளியிட வேண்டும்.

இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com