கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து!
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள் - சென்னை உயர் நீதிமன்றம்கோப்புப்படம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரண சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: V M சுப்பையா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில், 18 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். அவர்கள் 18 பேரும், குண்டர் சட்டத்தில் தாங்கள் அடைக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுக்கள் யாவும், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம். ஜோதிராமன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்முகநூல்

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கால தாமதமாக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதையும், ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்பதையும் முன்வைத்து குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டனர்.

இதனையடுத்து நீதிபதிகள், “சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் சிறையில் உள்ள நிலையில் இதற்கு மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் வைத்திருப்பதில் என்ன தேவை இருக்கிறது? கள்ளச்சாராய விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் மது விலக்கு துறை என்ன செய்து கொண்டிருக்கிறது” என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினர்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக கைதானவர்கள் மீதான குண்டர் சட்டம் ரத்து!
சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதன் நோக்கம் என்ன? பேரவை முன்னவர் துரைமுருகன் கேள்வி!

இத்துடன், “மது விலக்கு போலீசார் பதிவு செய்யும் வழக்குகளில், பாதிக்கும் மேற்பட்டவை ஜோடிக்கப்பட்டவை. முதன்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாரயம் தயாரிப்பு மற்றும் விற்பனை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மது விலக்கு பிரிவு போலீசார் பல தவறுகளை செய்கின்றனர். அவ்வாறு தவறிழைக்கும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை” என தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்கள்ட்விட்டர்

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், “இந்த கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் தயாரிக்கப்படவில்லை. மாதவரத்தில் இருந்து வந்துள்ளது. இதற்கு, கல்வராயன் மலைக்கும் தொடர்பல்ல. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்று அல்லது நாளை சிபிஐயிடம் ஒப்படைக்கப்படும். 70 பேர் மரணம், நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு என 110 நாட்கள் அந்த கிராமமே அசாதாரண நிலையில் இருந்ததன் காரணமாகவே அனைவரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

அனைத்தையும் கேட்ட பின், மனுதாரர்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அனைவர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com