ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை.. ஒரே நாளில் இரண்டு முறை விலை ஏற்றம்.!
சர்வதேச சந்தையின் பவர் ஹவுஸாக கருதப்படும் தங்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை உயர்ந்து ஒரு லட்சத்து 210 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. காலையில் ஒரு சவரன் தங்கம் 740 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது மீண்டும் 440 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அதன்படி, 1 கிராம் தங்கத்தின் விலை 12,515 ரூபாயாகவும், 22 கேரட் ஆரபரணத் தங்கம் 1,00,210 உயர்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போர், உலக பொருளாரத்தில் நிலவும் நிலையற்றத் தன்மை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றின் காரணமாக, இந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நவம்பர் மாதத்தில் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில், மீண்டும் உயர ஆரம்பித்த தங்கத்தின் விலை தற்போது ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது.
அதே போல, வெள்ளியின் விலையும் கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து. ஒரு கிராம் வெள்ளி 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் வெள்ளியின் விலை 110 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

