இந்தியாவில் மோட்டார் வாகனங்கள்.. ஏழை - பணக்காரர் இடையே குறுகும் இடைவெளி!
வாகனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
வாகனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஒரு தொகுப்பைப் பார்க்கலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களும் கார்களும் வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளி குறுகிவருகிறது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
கிராமப்புறங்களில் 2011 - 2012ஆம் ஆண்டில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினரில் 38.2 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்களை வைத்திருந்தனர். இதுவே 2023 - 2024ஆம் ஆண்டில் 69.7 விழுக்காடாக அதிகரித்தது. கிராமப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினரில் 2011 - 2012ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை 6.2 விழுக்காடு ஆகும். இதுவே, 2023 - 2024ஆம் ஆண்டில் பல மடங்கு அதிகரித்து 47.1 ஆக ஆனது.
நகர்ப்பகுதிகளில் 2011 -2012ஆம் ஆண்டில் மேல்தட்டில் உள்ள 20 விழுக்காட்டினரில் 59.9 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்கள் வைத்திருந்தனர். இதுவே, 2023 - 2024ஆம் ஆண்டில் 70.4 ஆக அதிகரித்தது. நகர்ப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினரில்19.7 சதவீதத்தினர் 2011 - 2012ஆம் ஆண்டில் மோட்டார் வாகனங்களை வைத்திருந்தனர். இதுவே, 2023 -2024ஆம் ஆண்டில் பலமடங்கு அதிகரித்து 60.4 ஆக ஆனது. கிராமப்புறங்களில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டினர் அதிகமாக மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கும் பட்டியலில் 76.6 விழுக்காட்டுடன் பஞ்சாப் முதல் இடத்தில் இருக்கிறது.
இரண்டாவது இடத்தில் 69.1 விழுக்காட்டுடன் கர்நாடகா இருக்கிறது. தெலங்கானா 67.1 விழுக்காட்டுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நகர்ப் பகுதிகளில் கீழ்த்தட்டில் உள்ள 40 விழுக்காட்டைப் பொறுத்தவரை மத்தியப் பிரதேசத்தில் 71.2 விழுக்காட்டினர் மோட்டார் வாகனங்கள் வைத்திருக்கின்றனர். இரண்டாம் இடத்தில் உத்தரப்பிரதேசம் 65.4 விழுக்காட்டைக் கொண்டிருக்கிறது. 64.7 விழுக்காட்டுடன் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.

