சூர்யா பட பாணியில் உடலில் தங்க கட்டிகள் கடத்தல்.. 3 கிலோ பறிமுதல்.. திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
gold seized
gold seizedjpt desk

உளவுத் துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்திறங்கிய ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில், அவரது உடலில் மறைத்து கடத்திவந்த 1.06 கிலோ கடத்தல் தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

smuggled gold
smuggled goldpt desk

அதேபோல், கோலாலம்பூரைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வந்த ஒரு குடும்பத்தினரை சோதனை செய்தனர். அப்போது, குழந்தையின் கால் சட்டை மற்றும் காலணிக்குள் மறைத்து கடத்திவந்த ஒரு கிலோ 872 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 2 கிலோ 932 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மொத்தம் மதிப்பு 1 கோடியே 69 லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com