தங்கம், வெள்ளி விலை உயர்வு... இனி தொடர்ந்து அதிகரிக்குமா?

சென்னையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
gold rate
gold ratePT

சென்னையில் இன்று (மே 27) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கமானது கிராமிற்கு 65 ரூபாய் விலை உயர்ந்து 6,720 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரனானது ரூபாய் 53,760-க்கு விற்பனை ஆகிறது. அதே போல் வெள்ளி ஒரு கிராம், ரூபாய் 1.50 விலை உயர்ந்து ரூ. 97.50 க்கு விற்பனை ஆகிறது.

முன்னதாக கடந்த மே 20ம் தேதி தங்கமானது சவரன் ஒன்றுக்கு ரூபாய் 55,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தங்கமானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், மே 20 மற்றும் 24-க்கு உட்பட்ட காலத்தில் ரூ. 2,000 குறைந்தது தங்கம். தொடர்ந்து குறையவேண்டும் என நகை ஆர்வலர்கள் எதிர்பார்த்த போதிலும், விலை கூடியுள்ளது அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

gold rate
$5 டிரில்லியன் மதிப்பை கடந்த இந்திய பங்கு சந்தை , முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com