தங்கம் விலை குறைவுPt
தமிழ்நாடு
திடீர் வீழ்ச்சி: ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,160 குறைந்தது
கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 1,160 சரிவை சந்தித்துள்ளது.
கடன்களுக்கான வட்டி விகிதங்களை அமெரிக்க வங்கிகள் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க கடன் பத்திரங்கள் வலுவாக இருப்பது, போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்துவந்தது.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் தங்கமானது சவரனுக்கு ரூபாய் 1,160 குறைந்து 53,600 ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 145 குறைந்து 6700 எனவும் விற்கப்படுகிறது. இந்த விலை குறைவானது மக்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தி இருக்கிறது.