gold price rises twice in a single day crosses 66 thousand
தங்கம்முகநூல்

அடேங்கப்பா...! ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை.. புதிய உச்சம்!

தங்கம் விலை இன்றும் மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.66,400 விற்பனை செய்யப்படுகிறது.
Published on

தங்கத்தின் விலை கடுமையான விலை உயர்வைக் கண்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தொட்டுவிடும் எனக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனையானது. வெள்ளியும் கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 112 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையே, இன்று 2-வது முறையாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

gold price rises twice in a single day crosses 66 thousand
தங்கம் pt

சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.180 உயர்ந்து, சவரனுக்கு ரூ.1440 உயர்ந்துள்ளது. இதனால் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.66,400 விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை தொட்டு புதிய உச்சத்தை பதிவு செய்த நிலையில், அதன் பின்னர் விலை மளமளவென சரிந்திருந்தது. பின்னர் அதே மாதம் 19-ஆம் தேதி ரூ.64 ஆயிரத்தை தாண்டியது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இறுதியில் விலை குறைந்து நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதல் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகத்தைக் கண்டுள்ளது.

gold price rises twice in a single day crosses 66 thousand
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. முடிச்சு உட்டீங்க போங்க டிரம்ப்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com