தங்கம் விலையில் தொடர் உயர்வு - இன்றைய விலை நிலவரம் என்ன?

கடந்த சில வாரங்களாக சரிவை சந்தித்து வந்த தங்கமானது, தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்கோப்புப்படம்

தங்கம் வாங்கி சேமிக்கும் பழக்கத்தை இந்திய மக்கள் காலம்காலமாக செய்து வருகின்றனர். ஆங்கிலேய ஆட்சிக்குமுன் இந்தியாவில் நாணயம் தங்கமாக, வெள்ளியாகதான் இருந்தது. ஒரு பொருளை வாங்கவேண்டுமென்றால், பொன் வராகம் அல்லது வெள்ளி வராகம் கொடுத்துதான் பொருளை பெற்று செல்வார்கள். இப்படி தங்கம் இங்கு கொட்டிக்கிடந்தது.

தங்கம்
தங்கம்

அரசன் தன்னை பற்றி கவி பாடும் அறிஞர்களுக்கும், சேவகர்களுக்கும், பரிசாக பொன்முடிப்பை கொடுக்கும் பழக்கம் இருந்தது என்றும் அப்படி பெறப்பட்ட பொன்னை, ஆபரணமாக செய்து கழுத்தில் போட்டு வந்தார்கள் என்றும் வரலாறு வாயிலாக நாம் தெரிந்துகொள்கிறோம். இந்தியாவின் இத்தகைய வளத்தைப்பார்த்துதான் அந்நியர்கள் படையெடுத்து வந்து, தங்கத்தை அபகரித்து சென்றார்கள் என்று ஒரு செய்தியும் உண்டு.

தங்கம் விலை நிலவரம்
தங்கம், வெள்ளி விலை உயர்வு... இனி தொடர்ந்து அதிகரிக்குமா?

அதன் பிறகு ஆட்சிமுறை மாறி, நாணய முறையும் மாறியது. ஒரு நாட்டின் பொருளாதார மதிப்பானது தங்கத்தை வைத்து மதிப்பீடு செய்ய ஆரம்பித்ததால், அமெரிக்கா உட்பட பல உலகநாடுகளும் தங்கத்தின் மேல் முதலீடு செய்ய ஆரம்பித்தன. அதன் பிறகு தங்கமானது படிப்படியாக விலை அதிகரிக்கத் தொடங்கியது.

Gold | GoldRate | GoldPrice
Gold | GoldRate | GoldPrice

எத்தனை ஆயிரங்கள் விலை அதிகரித்தாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வதை இந்திய மக்கள் இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கமானது தற்பொழுது பங்கு வர்த்தகத் துறையிலும் கால் பதித்துவருவதால், தங்கப்பத்திரத்தை வாங்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலையானது கணிசமாக அதிகரித்து வருகிறது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து ரூ. 54,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து 6,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com