நேற்றைப் போல் இன்றும் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை! தற்போதைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,880 க்கு விற்பனை ஆகிறது.
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து சாமானிய மக்களை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. மேலும், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் முதலீடு பெரும்பாலும் தங்கத்திலேயே இருக்கிறது. இதனால், என்னதான் தங்கத்தின் விலை ஏறினாலும் மக்கள் தங்கம் வாங்குவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
அதுமட்டுமல்லாது, பங்குச்சந்தைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாகவும், உலக பொருளாதார சூழல் காரணமாகவும், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்றைய தினம் (28.3.2025) தங்கத்தி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.105 உயர்ந்தநிலையில், இன்று ( 29.3.2025) கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 8360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.66,880 ஆக விற்பனை ஆகிறது. எனவே, சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 67 ஆயிரத்தை நெருங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ₹113 ஆக குறைந்தும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,13,000 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.