Election flying squadpt desk
தமிழ்நாடு
நாமக்கல்: வாகன சோதனையில் 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்
ராசிபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர்: மோகன்ராஜ்
நாமக்கல் மாவட்ட எல்லை பகுதியான மல்லூர் அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையிலான அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலத்தில் இருந்து மதுரையை நோக்கிச் சென்ற வாகனத்தில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.
Gold seizedpt desk
அதில் வாகனத்தில் 8.78 கோடி மதிப்பிலான 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் குறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேற்கொண்டு பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.