தேவர் ஜெயந்திக்கு அண்ணாமலை உடன் வருகை தந்த கோவா முதல்வர்!

"தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு அகில இந்திய் பாஜக சார்பில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் இங்கு வந்துள்ளார்" அண்ணாமலை
அண்ணாமலை
அண்ணாமலைpt web

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கும், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தெய்வத்திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு அகில இந்திய பாஜக சார்பில் கோவா மாநிலத்தின் முதலமைச்சர் இங்கு வந்துள்ளார்.

தேவர் ஐயா புகழை அவர் (கோவா முதல்வர்) மதுரை விமான நிலையத்தில் பேசினார். எப்படிப்பட்ட மாமனிதர், ஒரு தேசியவாதி, நாட்டிற்காக பாடுபட்டவர், சமுதாயத்தின் ஒற்றுமைக்காக நல்லிணக்கத்திற்காக தேசியமும் ஆன்மீகமும் தன் இரு கண்கள் என தேவர் ஐயா பேசியதை மதுரை விமான நிலையத்தில் பேசினார்” என கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com