முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா அணிய அனுமதி மறுப்பு!
முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா அணிய அனுமதி மறுப்பு!புதிய தலைமுறை

முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா, குடை, கைப்பைகளை வாசலிலேயே விட்டுச்செல்ல சொன்ன அதிகாரிகள்!

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கருப்பு நிறத்திற்கு அனுமதி மறுப்பு. மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை வாங்கி வைத்த பின்னரே முதலமைச்சரின் நிகழ்ச்சிக்கு அனுமதி.
Published on

செய்தியாளர்: முருகேசன்

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா அணிய அனுமதி மறுப்பு!
“ஜான் மார்ஷலை கௌரவிப்பது தமிழ்நாடு அரசிற்கு பெருமை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதில் கருப்பு நிற துப்பட்டாவை அணிந்து வந்த மாணவிகளிடம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர், ‘கருப்பு நிற உடை அணியக்கூடாது’ எனக்கூறி அவற்றை வாங்கி வைத்தனர் அங்கிருந்த அதிகாரிகள். நிகழ்ச்சி முடிந்த பின்னரே துப்பட்டாக்கள் உரிய மாணவிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. மட்டுமன்றி கருப்பு நிற கைப்பைகள், குடை போன்றவையும் நுழைவுவாயிலேயே வாங்கிவைக்கப்பட்டன. நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா, குடை, கைப்பையை வாசலிலேயே விட்டுச்செல்ல நிர்ப்பந்தம்!
முதல்வர் நிகழ்ச்சி: கருப்பு நிற துப்பட்டா, குடை, கைப்பையை வாசலிலேயே விட்டுச்செல்ல நிர்ப்பந்தம்!

நீட் நுழைவுத் தேர்வு சமயத்தில் துப்பட்டா அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என்ற நடைமுறையை கடந்த காலங்களில் கடுமையாக எதிர்த்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

அப்படியிருக்கையில், இன்று முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அதே போன்ற முறையை மாணவிகளிடம் அரசு தரப்பில் இருந்து கடைப்பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com