"நான் பேசும் போது யாராவது எழுந்து போனீங்கனா ரத்தம் கக்கிச் சாவீர்கள்" - செல்லூர் ராஜு கல கல பேச்சு!

"தமிழ்நாட்டு மக்கள் இன்னுமா நம்புறாங்க..எவ்வளவு அடிச்சாலும் வாங்குறாங்க பா" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையாகப் பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு PT WEB

மதுரை செல்லூர் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அதிமுக வடக்கு தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் சரவணன் மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் மற்றும் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "நான் இப்போது பேசப் போகின்றேன். நான் பேசும் போது யாராவது எழுந்து சென்றார்கள் என்றால் எல்லோரும் ரத்தம் கக்கிச் சாவீர்கள்” என வடிவேலு பட காமெடி போலப் பேசி தனது பேச்சை ஆரம்பித்தார்.

"எம்ஜிஆர் புகழைப்படாமல் யாரும் கட்சி ஆரம்பிக்க முடியாது. நடிகர் விஜய் ஆக இருந்தாலும் இன்றைக்குப் பாராட்டுகிறார். மன்னர் பரம்பரையை ஒழித்து இருக்கிறோம். திமுக பரம்பரையை ஒழிக்க முடிகிறதா. ஆனால் ஒழிக்க முடியவில்லை. 500 ரூபாய்க்கு சிலிண்டர் தருகிறோம் என ஏமாற்றுகிறது திமுக, எப்படி எல்லாம், ஏமாற்றுகிறது பாருங்கள்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது" - தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன்!

தமிழ்நாட்டு மக்கள் இன்னுமா நம்புறாங்க, எவ்வளவு அடிச்சாலும் வாங்குறாங்க” என வடிவேல் பாணியில் திமுகவை விமர்சித்து நகைச்சுவையாகப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமராக இருக்கும் மோடியின் மாநிலமான குஜராத்திலும் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. சாக்லேட் வடிவில் போதைப் பொருள், என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்"என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com