"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது" - தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன்!

"காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் கீழே இறங்கி வந்து மரியாதை பெற முடியவில்லை; என்னை மன்னித்து விடுங்கள்" என தமிழச்சி தங்கபாண்டியன் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன் PT WEB

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், திமுக சார்பில் தென் சென்னை மக்களவை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார். இதற்காக இன்று சென்னை பள்ளிக்கரணை உட்பட பல்வேறு இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபட்டார். அங்கு அவருக்கு ஆரத்தி எடுத்தும், ஆள் உயர மாலை அணிவித்தும், கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்தும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்
தமிழச்சி தங்கபாண்டியன்

இந்த வரவேற்புகள் அனைத்தையும் தேர்தல் பரப்புரை வாகனத்தில் இருந்து கொண்டே தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
“பாஜகவினர் கணக்கிலேயே இல்லை” - விளாசிய S.P வேலுமணி

பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர், "காலில் ஏற்பட்ட ஒரு சிறிய காயத்தால், எலும்பு முறிந்துள்ளது. இதனால் என்னால் எழுந்து நிற்கவோ, கீழே இறங்கி வந்து மரியாதை பெற்றுக் கொள்ளவோ முடியவில்லை. அதனால் உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com