“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும்” - பாட்டுப்பாடி வாக்கு சேகரித்த சீமான்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாடல்கள் பாடி வாக்கு சேகரித்தார்.
சீமான்
சீமான்புதிய தலைமுறை

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட சீமான், ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்’ என்ற வடிவேலு காமெடியை கூறி கலகலப்பாக பேசினார்.

Seeman with Candidates
Seeman with Candidatespt desk

‘அருணாச்சல பிரதேசம் வழியா சீனா போயிடுவேன்...’

தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு பேசிய அவர், “வட இந்தியர் வாழும் பகுதியில் இந்தியில் பேசி திமுகவினர் வாக்கு சேகரிக்கின்றனர். இதேநிலை நீடித்து, இங்கு வாழ இடமில்லை என்ற சூழல் வந்தால், அருணாச்சல பிரதேசத்துக்கு போய் சீனாவுக்கு போயிடுவேன். வேண்டுமென்றால் நீங்களும் என்னுடன் வாருங்கள்” என்றார்.

சீமான்
மக்களவை தேர்தல்: தருமபுரி தொகுதியில் வெற்றிவாய்ப்பு யாருக்கு? களத்தில் முந்துகிறாரா சௌமியா அன்புமணி?

‘கூண்டுக்கிளியாக தமிழர்கள்!’

தொடர்ந்து பேசுகையில், “கிளி எதிர் காலத்தைச் சொல்லும். நெற்களை காட்டி கூண்டுக்குள் அடைப்பான்; அதுபோல கூண்டுக் கிளியாக தமிழர்கள் இருக்கின்றனர். திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்கும். திருடர்கள் எப்போதும் திருந்த மாட்டார்கள் நாம் தான் திருத்த வேண்டும்.

ஒரு வீட்டை வாடகைக்கு பேசி முடிக்கும் புரோக்கர் என்ன செய்கிறாரோ அது போலதான் நாட்டிற்கு வேலை செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” என்றார் காட்டமாக.

சீமான்
1957 - 2014|‘வாக்களிக்க மட்டும்தான் பெண்களா? போட்டிக்களத்தில் பெண்கள் ஏன் இல்லை?’ ECI Data ஓர் அலசல்

‘வீண் முயற்சி அல்ல; விடாமுயற்சி’

மேலும் “நாங்கள் தோற்று போனவர்கள் அல்ல வெற்றியை துரத்திக் கொண்டிருப்பவர்கள் ; ஒருநாள் அது எங்கள் கைகளில் சிக்கும். ஆரம்பத்தில் வீண் முயற்சி என்பார்கள்; வெற்றி பெற்ற பிறகு விடாமுயற்சி எனபார்கள்; ஜூன் 4 ஆம் தேதி நம்மை விடாமுயற்சி என்பார்கள்.

கிரகணம் வரும் போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும் என்பார்கள் ; ஏப்ரல் 19 ல் சூரியனுக்கு வாக்களித்தால் நாடே கெட்டுப்போகும்.

காலசக்கரத்தின் சுழற்சியில் ஒருநாள் நாங்கள் அதிகாரத்திற்கு போவோம்; இந்திய நாட்டை நாங்கள் ஆண்டால் நாசமாகிவிடுமா? இந்திய நாடு மோடிக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? ராகுல் காந்தியின் பாட்டன் சொத்தா?” என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

திமுக - அதிமுக; பாஜக - காங்கிரஸ்.... என்ன வித்தியாசம்?

“திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே வித்யாசம்தான்; திமுக கொடியில் அண்ணா இருக்கமாட்டார்... அதிமுக கொடியில் அண்ணா இருப்பார். பாஜக காங்கிரஸை பொறுத்தவரை, பாஜக காவி கட்டிய காங்கிரஸ்; காங்கிரஸ் கதர் அணிந்த பாஜக. இவர்கள் பார்த்தீனியம் செடியை விட மோசமானவர்கள்” என விமர்சித்தார் சீமான்.

கூட்டம் முடிந்த பின்னர் தொண்டர்கள் வீசி எறிந்த தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை நாம் தமிழர் கட்சியினர் சேகரித்து அகற்றிய காட்சி, அங்கிருந்தோரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com