விருதுநகர்: ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்கம், 4.4 கிலோ வெள்ளி பறிமுதல்!

விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 கிலோ தங்க நகைகள், 4.4 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Gold seized
Gold seizedpt desk

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் சத்திரெட்டியாபட்டி விளக்கு அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி நடராஜன் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர்கள் முருகன், முதல்நிலைக் காவலர் சீனிவாசன், தனலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கொரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

Van
Vanpt desk

அப்போது அதில், 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 4.4 கிலோ வெள்ளி பொருட்கள் உட்பட சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரையில் இருந்து நாகர்கோவில் பகுதியில் உள்ள நகை கடைகளுக்கு அவற்றை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். மேலும் தங்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Gold seized
பொள்ளாச்சி: கோழிப் பண்ணை தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்

இதனையடுத்து நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அவற்றை விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகள் விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com