IT Raidpt desk
தமிழ்நாடு
பொள்ளாச்சி: கோழிப் பண்ணை தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு - ரூ.32 கோடி பறிமுதல் என தகவல்
பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்தியாளர்: ரா.சிவபிரசாத்
பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் அருள் முருகன் மற்றும் சரவண முருகன் ஆகியோரது கோழிப் பண்ணை இயங்கி வருகிறது. அதன் தலைமை அலுவலகம் பொள்ளாச்சி வெங்கடேச காலனியில் அமைந்துள்ளது. இந்நிலையில், இவர்களது அலுவலகம் மற்றும் பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர் விடிய விடிய சோதனை நடத்தி வருகின்றனர்.
Poultry Farm Head Officept desk
இந்த சோதனையில் அலுவலகத்தில் அவர்கள் வைத்திருந்த சுமார் 32 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட 32 கோடி ரூபாய் பணத்தை பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.