“தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கொட்டினாலும் தாய்மார்களின் வாக்கு தாமரைக்கே” - அண்ணாமலை

“தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும் தாய்மார்கள் தாமரைச் சின்னத்தில்தான் வாக்களிப்பார்கள்” என்று பரப்புரையில் அண்ணாமலை பேச்சு.
Annamalai
Annamalaipt web

செய்தியாளர்: சுரேஷ்குமார்

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக பாஜக தலைவரும் கோவை தொகுதி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அண்ணாமலை
அண்ணாமலை

அப்போது கரைப்புதூரில் அண்ணாமலை பேசுகையில்... “தங்கச் சுரங்கத்தையே கொண்டு வந்து கோவை தொகுதியில் கொட்டினாலும், இரவு நேரத்தில் திமுகவினர் காலங்காலமாக கரண்டை ஆப் செய்துவிட்டு பணப்பட்டுவாடா செய்தாலும், தாய்மார்கள் அன்புத்தம்பி அண்ணாமலைக்குதான் வாக்களிப்பார்கள். உங்களுக்காக நான் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போது என் பக்கம்தான் நீங்கள் நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

Annamalai
“10 ஆண்டு ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டுமே; இன்னும் இருக்கு”- ANI பேட்டியில் பிரதமர் மோடி பேசியதுஎன்ன?

39 மாதங்களாக திமுகவினர் சம்பாதித்த பணத்தை கொண்டு வந்து கொட்டினாலும் தாமரை சின்னத்தில்தான் நீங்கள் வாக்களிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

I.N.D.I.A. கூட்டணியில் இதுவரை தலைவர் தேர்ந்தெடுக்கப்படவிக்லை. செம்மறி ஆடுகளை கூட ஒன்றாக விட்டால் தனக்கான தலைவன், தலைவியை தேர்ந்தெடுத்திருக்கும். ஆனால், I.N.D.I.A. கூட்டணியில், கூட்டணி என சொல்லிக்கொள்ளும் கட்சிகள் மாநில வாரியாக எதிர் எதிரே போட்டி இடுகின்றனர்,

அண்ணாமலை
அண்ணாமலை

கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். இது எப்படி கூட்டணியாகும்?” என்று கேள்வி எழுப்பினார்.

Annamalai
”வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை” - பாஜக மீது இபிஎஸ் கடும் தாக்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com