Actor Sivakarthikeyanpt desk
தமிழ்நாடு
“வாக்களிப்பது நமது கடமை; அனைவரும் வாக்களிக்க வேண்டும்” - ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
“வாக்களிப்பது நமது உரிமை. மனசாட்சியுடன் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியுடன் வந்து வாக்களித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
Actor Sivakarthikeyn with his wifept desk
“வாக்கு நமது உரிமை. வாக்களிப்பது நமது கடமை. அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும். வாக்கு செலுத்தினால்தான் ஏதேனும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும். ஆபிரகாம் லிங்கன் கூறியது போல், புல்லட்டை விட வலிமையானது வாக்கு. ஆகவே அனைவரும் வாக்கு செலுத்த வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களிடம் கலந்தாய்வு செய்யாமல் உங்களுக்கு யாரை பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு மனசாட்சியுடன் வாக்கு செலுத்தவும்” என கேட்டுக் கொண்டார்.