\
Gautami Quits AIADMK After Three-Year Association
கே. பழனிசாமி - கௌதமிPt web

நடிகை கௌதமி அதிமுகவில் இருந்து விலகல்.. கே. பழனிசாமிக்கு கடிதம்!

2023-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பயணித்து வந்த கௌதமி அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Published on

1997 முதல் 2023-ம் ஆண்டு வரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவில் பயணித்து வந்த நடிகை கௌதமி, கடந்த 2024-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்து மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இந்தசூழலில் தான், அதிமுகவில் இருந்து விலகுவதாக கௌதமி இன்று தெரிவித்துள்ளார்.

கௌதமி
கௌதமிகோப்புப்படம்

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமிக்கு நடிகை கௌதமி எழுதியுள்ள கடிதத்தில், ”மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் அவர்களுக்கு வணக்கம். இன்று 14/06/2026 முதல் நான் வகித்து வரும் அஇஅதிமுக அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியில் இருந்தும் தற்போது உள்ள அரசியல் சூழல் கருத்தில் கொண்டு, நான் சமூக சேவை செய்ய ஏதுவான வகையில் கனத்த இதயத்துடன் என்னை விடுவித்துக் கொள்கிறேன்.

Gautami Quits AIADMK After Three-Year Association
”அதிமுக வென்றது பாமக போட்ட பிச்சை..” EPS-ஐ கடுமையாக விமர்சித்த சிவி சண்முகம்!

கழகத்தில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய முன்னாள் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பிற அணி மாநில செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூர் நகரக் கழக செயலாளர்களையும் மனதார வணங்கி நன்றி கூறி என்னை கழகத்திலிருந்து விடுவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gautami Quits AIADMK After Three-Year Association
”பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது தமாக” - ஜி.கே. வாசன் அறிவிப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com