ஆம்ஸ்ட்ராங் படுகொலை | வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ஆம்ஸ்ட்ராங்கை ஐந்து முறை கொலை செய்ய திட்டமிட்டு, போதுமான ஆட்கள் இல்லாததால் கைவிட்டதாக கைதான கும்பல் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் புதிய தலைமுறை

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஐந்தாம் தேதி இரவு ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுவரை 11 நபர்களை செம்பியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்தாண்டு ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

குறிப்பாக ஒரு வருடமாக காத்திருந்த நிலையில் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், ஜொமேட்டோ உணவு டெலிவரி ஊழியர்கள் போல சட்டை அணிந்து வந்து, உணவு வந்திருப்பதாக கூறி கவனத்தை திசை திருப்பி வெட்டியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கட்டுமான பணியை பார்த்துவிட்டு 3 நபர்களுடன் நின்று கொண்டிருந்தபோது, உணவு டெலிவரி ஊழியர்போல வந்த ஒருவர், உங்களுக்கு உணவு வந்து இருப்பதாக அங்கு நின்றிருந்த பாலாஜி என்பவரிடம் கூறி அழைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங்
முடிந்தது வழக்கு விசாரணை; ஆம்ஸ்ட்ராங் உடலை பொத்தூரில் அடக்கம் செய்ய உத்தரவு

அப்போது “யார் நீங்கள்?” என கேட்ட போது, அந்த கும்பல் பாலாஜியை கட்டுமான பணி குழியில் தள்ளிவிட்டு ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வெட்டப்படுவதை கண்ட கட்டுமான பணியாளர்கள் தடுக்க வந்த போது அவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் வீரமணி, வெட்டுவதை தடுப்பதற்காக சென்றபோது அவரையும் அந்த கும்பல் தலை மற்றும் முதுகில் வெட்டி உள்ளது.

வீரமணி, ஆம்ஸ்ட்ராங்கின் அண்ணன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெளியான அதிர்ச்சி தகவல்கள்...

ஆற்காடு சுரேஷ் இறந்த நாளிலிருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சதித்திட்டம் தீட்டி வந்ததாகவும், ஐந்து முறை 'ரெக்கி ஆப்ரேஷன்' மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வாக்குமூலத்தில் கைதானவர்கள் தெரிவித்திருப்பதாவது - “ஆற்காடு சுரெஷ் இறந்த நாளில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கொல்லை திட்டம் தீட்டி வந்தோம். ஐந்து முறை ரூட் எடுத்த போதிலும் போதுமான ஆட்கள் எங்களிடம் இல்லாததால், கொலை செய்யும் திட்டத்தை கைவிட்டோம்.

ஆம்ஸ்ட்ராங்
2015ல் தென்னரசு, 2023ல் ஆற்காடு சுரேஷ், 2024ல் ஆம்ஸ்ட்ராங்... குலைநடுங்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி!

ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால் அனைத்து ஆட்களையும் திரட்டிக்கொண்டு கொலை செய்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கொலை செய்தோம். மேலும், கட்டுமான பணி நடைபெறுவதால் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பணியை பார்வையிட ஆம்ஸ்ட்ராங் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளதை கண்காணித்து ஸ்கெட்ச் போட்டு, கொலை செய்தோம்” என்றுள்ளார்.

ஆற்காடு சுரேஷ்
ஆற்காடு சுரேஷ்

வேறு ஒரு பிரச்னை எனக் கூறி கடைசியாக கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களையும், கைதான புன்னை பாலுவின் உறவினர் மணிவண்ணன் அழைத்துச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கில் யார் யார் பின்னணியில் உள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட நபர்களை மீண்டும் காவலில் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங்
”பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது ”- ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் குறித்து நீதிபதி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com