தனியார் பள்ளிகளில் இலவச கல்வி
தனியார் பள்ளிகளில் இலவச கல்விமுகநூல்

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.. விண்ணப்பப் பதிவு எப்போது?

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மூன்றாவது வாரம், அதாவது அடுத்த வாரம் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RTE எனப்படும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 8000த்திற்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை, இந்த திட்டத்தில் கட்டணம் செலுத்தாமல் படிக்கலாம்.

இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் மூன்றாவது வாரம், அதாவது அடுத்த வாரம் தொடங்குகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதலாக தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து பயனடைந்து வருகின்றனர்.

பள்ளித்துறை அதிகாரிகள் தெரிவிப்பது என்ன?

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி
Headlines| இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர் முதல் அசத்தல் வெற்றிபெற்ற சிஎஸ்கே வரை!

வாய்ப்பு மறுக்கப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்தோர் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். ஆதரவற்றோர், எச்ஐவி பாதிப்புக்குள்ளானோர், 3-ஆம் பாலினத்தினர், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும், மற்றும் வருமானம், இருப்பிடம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோர் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் தங்களது வீட்டின் அருகில் இருக்கும் அதிகபட்சம் 5 பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளியில் இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com