Headlines| இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதல்வர் முதல் அசத்தல் வெற்றிபெற்ற சிஎஸ்கே வரை!
5 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை. மாநில சுயாட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு. அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 50 விழுக்காட்டினருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தைக்கூட படிக்க முடியவில்லை என்றும் பேச்சு.
மத்திய அமைச்சர் அமித் ஷா , அம்பேத்கரை விமர்சித்தபோது ஆளுநர் எங்கே போனார் என அமைச்சர் கோவி செழியன் கேள்வி. ஆளுநரின் டபுள் ரோல் தமிழகத்தில் எடுபடாது என்றும் விமர்சனம்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சேவையை எதிர்வரும் தலைமுறை மறவாது என பிரேமலதா விஜயகாந்த் பேசிய காணொளியை பகிர்ந்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி.
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிருப்தியா?. அதிமுகவே தனது உயிர் மூச்சு என விளக்கம்.
அதிமுக உடனான கூட்டணி முழு திருப்தியாக உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி. அதிமுக கூட்டணியோடு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் அமையும் என்றும் நம்பிக்கை.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும். கட்சித் தலைவர் விவகாரத்தில் ராமதாஸ் முடிவை விமர்சித்த நிலையில் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை.
வங்கக்கடல் பகுதியில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம். 61 நாட்கள் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், மேட்டூர், கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி.
திருச்செந்தூர் அருகே காவலரின் தாயை கொலை செய்து நகைகள் கொள்ளை. மர்ம நபர்களை தீவிரமாக தேடும் காவல் துறை.
சென்னையில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல். 8 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை.
விருதுநகர் அருகே மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு. கோயில் திருவிழாவில் மைக்செட் அமைக்கும் போது நேர்ந்த சோகம்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் அரசு மருத்துவமனையில் தீ விபத்து. 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றம்.
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு மேற்கு வங்க மாநிலத்தில் வலுக்கும் எதிர்ப்பு. மீண்டும் வன்முறை வெடித்ததால் பதற்றம்.
விண்வெளியில் 11 நிமிட பயணத்தை முடித்துவிட்டு பத்திரமாக தரையிறங்கிய பெண்கள். கண்ணீர் சிந்தியும், பூமிக்கு முத்தமிட்டும் நெகிழ்ச்சி.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம். கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்.
பெல்ஜியம் நாட்டுக்கு விரையும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள். கைது செய்யப்பட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சியை இந்தியா அழைத்து வர நடவடிக்கை.
ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி.