”டெல்லிக்கு மோடிஜி; தமிழ்நாட்டுக்கு இபிஎஸ்; ஆனால் சிலர்..” - அண்ணாமலை மீது ஆர்பி.உதயகுமார் அட்டாக்!
செய்தியாளர்: மணிகண்டபிரபு.
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில்....
ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் அதிருப்தி, திமுக தொண்டர்கள் அதிருப்தி, அரசு ஊழியர்கள் அதிருப்தி, மாணவர்கள் அதிருப்தி, விவசாயிகள் அதிருப்தி, பெண்கள் அதிருப்தி. ஆனால், ஸ்டாலின் குடும்பம் மட்டுமே திருப்தியாக உள்ளது. மக்கள் உங்கள் ஆட்சியை விரும்பவில்லை. திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. கடைக்கோடிக்கு திட்டங்களை சேர்ப்பதில் 100 சதவீதம் ஸ்டாலின் அரசு தோல்வி அடைந்து விட்டது. தேற்றுப்போன ஸ்டாலின் அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள்.
இன்றைக்கு எடப்பாடியாருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அலை வீசுகிறது. இன்றைக்கு பாஜக மத்திய தலைமை தௌ;ளத் தெளிவாக அறிவித்திருக்கிறது. டெல்லிக்கு தலைமை மோடிஜி, தமிழ்நாட்டுக்கு தலைமை எடப்பாடியார். சிலர் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள, தாங்கள் இருப்பதை காட்டிக் கொள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலே கருத்து சொல்வதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எடப்பாடியார் தலைமையில் தான் அதிமுக ஆட்சி மலரும். ,எடப்பாடியார் தலைமையில் தான் கூட்டணி. என்பதில்தெளிவாக இருக்கிறோம்.
எடப்பாடியாரை முதலமைச்சராக முன்னிறுத்தி வாக்குகளை சேகரித்து மாபெரும் வெற்றி என்பது ஒரே இலக்கு, மக்கள் விரோத திமுக அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். ராமனாக எடப்பாடியாரை முன்னிறுத்தி திமுக என்கிற அசுரரை அந்த தீய சக்தியை வீழ்த்துவார். அந்த மகத்தான அம்பையை எழுதுவதற்கு காலம் கனிந்து வந்துவிட்டது கருத்துக்கு இதில் தடையில்லை.
இதிலே எந்தவிதமான இடையூறும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்களும் தெளிவாக இருக்கிறார்கள் என பேசி உள்ளார்.