\
அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்pt

ரூ.100 கோடி மோசடி விவகாரம்.. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி கைது!

முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் 100 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் வழக்கில் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் முன் ஜாமினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on: 
Summary

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், 100 கோடி மோசடி வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். நீதிமன்றம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவரை காவலில் வைத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திமுக ஆட்சிக்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக, தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதாக, கூறப்படுகிறது.

Anbil Mahesh Denied Anticipatory Bail in ₹100 Crore Scam Case
அன்பில் மகேஸ்ANI

இந்தச்சூழலில் தான், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எப்போது வேண்டுமானால் போலீஸ் விசாரணைக்கு வரத்தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்ட நிலையில்,  இது ஒரு நிதி பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட வழக்கு, அன்பில் மகேஸுக்கு முன் ஜாமீன் வழங்கினால் எதுவும் வெளிவராது. அதனால், அன்பில் மகேஷை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிமன்றம் அன்பில் மகேஸின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தான் தற்போது முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஸை காவல்துறை அதிரடியாக கைதுசெய்துள்ளது. கைதான அன்பில் மகேஸ், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்படவிருக்கிறது. ஏற்கெனவே அன்பில் மகேஸ் வீட்டில் நடந்த ரெய்டில் ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்பில் மகேஸ்
வேட்டைக்காடாக தமிழ்நாடு; கோட்சூட் போடுவது மட்டும் முதல்வர் பணியல்ல - மு.க. ஸ்டாலின் விமர்சனம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com