\
cm vijay & semmalai
cm vijay & semmalai pt

தவெகவில் இணைந்த முக்கியப் புள்ளி.. அரவணைத்து வரவேற்ற முதல்வர் விஜய்!

அதிமுக முன்னாள் அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த மூத்த தலைவர் செம்மலை, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் 6 ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 9 ஆம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலியாக உள்ள மற்ற 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் தவெக சார்பில், அதிமுகவில் இருந்து விலகி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏக்களை வேட்பாளர்களாக தவெக அறிவித்துள்ளது. இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சத்யபாமாவை ஆதரித்து, முதல்வர் விஜய் தாராபுரம் மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகிய செம்மலை, தவெகவில் இணைந்தார். அவரை முதல்வர் விஜய் கட்சித் துண்டு அணிவித்து, ஆரத்தழுவி வரவேற்றார்.

செம்மலை கொங்கு மண்டலத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தவர். இவர் 1980ஆம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அதிமுகவில் இணைந்த செம்மலை, 1984, 2001 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், 2009ஆம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செம்மலை
செம்மலைPt web

இந்நிலையில், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் காரணமாக, கடந்த மே மாதம் அறிக்கை வெளியிட்டு அதிமுகவில் இருந்து செம்மலை விலகினார். அதன் பிறகு அரசியலில் இருந்து விலகியிருந்த செம்மலை, தாராபுரத்தில் பரப்புரை செய்ய வந்த முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டார். கொங்கு மண்டலத்தில் அரசியல் பின்புலம் கொண்ட செம்மலை, தவெகவில் இணைந்ததிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com