சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களுக்குள் புகுந்த முதலைகள் - வனத்துறை எச்சரிக்கை

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் அடுத்தடுத்து புகுந்த இரண்டு முதலைகளை. பாதுகாப்பாக பிடித்த வனத் துறையினர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.
Crocodile rescued
Crocodile rescuedpt desk

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிட ஆற்றின் கரையோர கிராமமான மேல்தவித்தாம்பட்டில் வசிக்கும் செல்வகுமார் என்பவரது வீட்டில், சுமார் 8 அடி நீளமும் 120 கிலோ எடையும் உள்ள முதலை ஒன்று நேற்று நள்ளிரவில் புகுந்துள்ளது, சப்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது முதலையை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக சிதம்பரம் வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Crocodile
Crocodilept desk

தகவல் அறிந்து வானவர் பிரபு தலைமையில் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்டனர். அதனைத் தொடர்ந்து சற்று தொலைவில் உள்ள கண்ணங்குடி கிராமத்தில் சாலை ஓரத்தில் முதலை இருப்பதாக மீண்டும் வனத் துறையினருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற வனத்துறையினர் 6 அடி நீளமுள்ள முதலையை பிடித்து வக்கராமரி ஏரியில் விட்டனர்.

Crocodile rescued
மேட்டுப்பாளையம்: வாழைத் தோட்டத்தினுள் புகுந்த 10 அடி நீள முதலை!

நள்ளிரவில் அடுத்தடுத்து இரண்டு கிராமத்தில் புகுத்த முதலைகளால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர், தற்போது வெப்பம் அதிகரித்து வருவதாலும் வாய்க்கால்கள் மற்றும் குளங்களில் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டுள்ளதாலும் அங்கிருந்து வெளியேறும் முதலைகள் கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர், எனவே கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com