மேட்டுப்பாளையம்: வாழைத் தோட்டத்தினுள் புகுந்த 10 அடி நீள முதலை!

மேட்டுப்பாளையம் அருகே காந்தவயல் கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டத்தினுள் புகுந்த பத்தடி நீள முதலையை மீண்டும் நீர்த் தேக்கத்தினுள் விட வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
முதலை
முதலைpt desk

செய்தியாளர்: இரா.சரவணபாபு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பகுதி காந்தவயல் கிராமத்தில் உள்ள வாழைத் தோட்டத்தினுள் பத்தடி நீள முதலை ஒன்று புகுந்துள்ளது. பவானி சாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளது காந்தவயல் கிராமம். இங்கு உள்ள வாழத் தோட்டத்தினுள் பத்தடி நீள முதலையொன்று படுத்து கிடப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

முதலை
முதலைpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் ஆய்வு நடத்தியதில் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து முதலை வெளியேறி வாழைத் தோட்டத்தினுள் புகுந்ததை கண்டறிந்தனர். முட்டையிடும் நோக்கத்தில் சேற்றுப் பகுதியை தேடிய முதலை வாழைத் தோட்டத்தினுள் வந்திருக்கலாம் என்று தெரிவித்த வனத் துறையினர் முதலையை பாதுகாப்பாக வெளியேற்றி மீண்டும் நீர்த் தேக்கத்தினுள் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com