விநாயகர் சதுர்த்தி விழா: மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடு உயர்வு
செய்தியாளர்: மணிகண்டபிரபு
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து விற்பனையாகிறது.
குறிப்பாக மதுரை மல்லிகைப் பூ நேற்று முன்தினம் 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக 1 கிலோ மல்லிகைப் பூ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல நேற்று முன்தினம் முல்லை 600 ரூபாய்க்கும், பிச்சி 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 800 ரூபாய்க்கும், அரளி 200 ரூபாய்க்கும், சம்மங்கி 200 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 150, பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று முல்லை 1000 ரூபாய்க்கும், பிச்சி 800 ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000 ரூபாய்க்கும், அரளி 300 ரூபாய்க்கும், சம்மங்கி 300 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 200, பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதிகாலை முதலே பூஜைக்குத் தேவையான பூக்களை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக பூக்கள் விலை உயர்ந்து விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.