டெல்லியில் கடும் பனிமூட்டம் | விமானம் மற்றும் ரயில் சேவையில் பாதிப்பு

டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக 170 க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 20 ரயில்கள் தாமதம் அடைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
டெல்லி கடும் பனிமூட்டம்
டெல்லி கடும் பனிமூட்டம்புதிய தலைமுறை

செய்தியாளர்: ராஜீவ்

விமானங்கள்

டெல்லியில் கடுமையான குளிர் நீடிக்கும் நிலையில் அடர்த்தியான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் பார்வை திறன் குறைந்துள்ளதால் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் உட்பட சுமார் 120க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு பல மணி நேரம் தாமதம் ஆகின்றன மற்றும் 53 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டெல்லி கடும் பனிமூட்டம்
1,330 எழுத்துக்களை கொண்டு திருவள்ளுவர் சிலை... எங்கே வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?

ரயில்சேவை

ரயில் சேவையை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 20 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலின்படி “பஞ்சாப், ஹரியானா, டெல்லி, மேற்கு ராஜஸ்தான் மேற்கு மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பார்வைத்திறன் 200 மீட்டருக்கு குறைவாக காணப்படுகின்றது.

மேலும் டெல்லியை பொருத்தவரை இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியது. டெல்லி மற்றும் வட இந்தியாவில், குறைந்தபட்ச வெப்பநிலை உடன் மூடுபனி நிலைகள் தொடரும். இதன் காரணமாக ஹரியானா மற்றும் பஞ்சாபில் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு கடுமையான குளிர் நீடிக்கும்” என்று கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com