தென்காசி | பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் - சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய பொதுமக்கள்!

பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய சுற்றுலா பயணிகளை, அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் காப்பாற்றியுள்ளனர்.
Flood
Floodpt desk

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன்னதாக கோடை விடுமுறை என்பதாலும், அருவிகளில் நீர்வரத்து இருந்ததாலும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தனர். பெண்கள் கைக்குழந்தைகளோடு அருவிப்பகுதி அருகே நின்று கொண்டிருந்தனர்.

Flood
Floodpt desk

இந்நிலையில், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் ஒரு சில நொடிகளில் தண்ணீர் அதிகரித்து பலரை இழுத்துச் செல்ல துவங்கியது, இதையடுத்து குளித்துக் கொண்டிருந்த பலரை அருவியில் இருந்து காவல் துறையினரும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்களும் வெளியேற்றி உள்ளனர். ஆனால், அருவியில் குளித்த பலர் தண்ணீர் அதிகரிப்பதை தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாத நிலையிலும், சப்தம் கேட்காத நிலையிலும் உள்ளே நின்றதால் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

Flood
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்.. இடி.. மின்னல்.. மழை! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இந்நிலையில், தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை அங்கு வந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் வெளியே இழுத்து வந்து காப்பாற்றியுள்ளனர். இதனால் பெரும் அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com