ஊரக உள்ளாட்சித் தேர்தல் |முதல்முறையாக புதிய வசதிகொண்ட EVM!
தமிழகத்தில் வரவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், முதன்முறையாகப் பல பதவிகளுக்கு வாக்களிக்கும் வசதியுடன் கூடிய மல்ட்டி போஸ்ட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவிகளுக்கு வாக்காளர்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க வேண்டியுள்ளதால், இதற்கு முன்புவரை வாக்குச் சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த முறை நான்கு பதவிகளுக்குமான வாக்கு செலுத்தும் வசதியுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதற்காக பெங்களூரு பெல் (BEL) நிறுவனத்திடமிருந்து 53,000 இயந்திரங்களைப் பெற்று மாநில தேர்தல் ஆணையம் மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் இவை பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. 2019இல் கன்னியாகுமரியின் மேல்புறத்தில் இந்த இயந்திரம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

