தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்முகநூல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: 13 பேர் கைது!

மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
Published on

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக, துப்பாக்கிச் சூடு நடத்தி காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகை பறிமுதல் செய்து காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது நடவடிக்கையின் போது, படகு மோதியதில் இரண்டு பேருக்கு காலில் முறிவு ஏற்பட்டு யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

தமிழக மீனவர்கள்
தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!

ஆனால், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால், 2 மீனவர்கள் காயமடைந்ததாக, தப்பி வந்த சக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு தமிழக மீனவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து வருகிற 31ஆம் தேதி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com