விருதுநகர்
விருதுநகர்புதிய தலைமுறை

விருதுநகர் : பட்டாசு ஆலையில் விபத்து; பல கிலோ மீட்டர் தூரத்தையும் தாண்டி ஏற்பட்ட அதிர்வுகள்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்ட நிலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on

செய்தியாளர்: மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழ ஓடம்பட்டி பகுதியில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளி விற்பனைக்காக ஆலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அவை வெடித்து சிதறியது. இந்த விபத்தால் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் வரை அதிர்வு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முழு விசாரணைக்கு பிறகே, சேத விவரங்கள் தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்
கிருஷ்ணகிரி | செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com