கிருஷ்ணகிரி தீ விபத்து
கிருஷ்ணகிரி தீ விபத்துபுதிய தலைமுறை

கிருஷ்ணகிரி | செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியில் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த நாகமங்கலம் பகுதியில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் செல்போன் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. கிட்டதட்ட 500 ஏக்கருக்கு மேல் இந்நிறுவனம் இயங்கிவருகிறது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில்தான், இன்று காலையில் எதிர்ப்பாராத விதமாக இப்பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழ்ந்துள்ளது. தகவலறிந்து அவ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி தீ விபத்து
சென்னை: திடீரென கொட்டித் தீர்த்த கனமழை... குளம்போல் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி!

கிட்டதட்ட மூன்று ஷிப்பிடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் இவ்விடத்தில் இருக்கும் பட்சத்தில், தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் முதல் ஷிப்டில் 1500 பணியாளர்கள் பணியாற்றி இருப்பர் எனக்கூறப்படுகிறது. அவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com