என்.எல்.சி. 2ஆவது சுரங்கத்தில் இயந்திரங்களில் பற்றிய தீ.. பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதம்!

என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், 2 ஆவது சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
NLC
NLCpt web

என்.எல்.சி.யில் நிரந்த தொழிலாளருக்கு இணையாக ஒப்பந்த தொழிலாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 2 ஆவது சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ விபத்து சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுவரை ஒப்பந்த தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை 5 முறை நடந்துள்ள நிலையில், அதில் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை. இதன் காரணமாக இப்போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com