Heavy rainpt desk
தமிழ்நாடு
சென்னை: திடீரென கொட்டித் தீர்த்த கனமழை... குளம்போல் தேங்கிய மழைநீர் - பொதுமக்கள் அவதி!
சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே பொழிந்த கனமழையால், குடியிருப்புப்பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
நசரத்பேட்டை ஊராட்சியில் உள்ள நடராஜர் நகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில், பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. கடந்த பருவமழையின்போது தேங்கிய நீரில், இப்பகுதி மக்கள், படகு சவாரி செய்தது தமிழக அளவில் பேசப்பட்டது. தற்போது பருவ மழைக்கு முன்பாகவே இத்தகைய பிரச்னை நிலவுகிறது.
தேங்கியுள்ள மழைநீர்pt desk
ஒரு சில வீடுகளின் உள்ளேயும் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் சிரமமமடைந்தனர். தங்கள் தவிப்பை கருத்தில் கொண்டு, பருவமழை தொடங்கும் முன்பு, மழை பாதிப்புகளை தடுக்கும் பணிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று நசரத்பேட்டை மக்கள் கோரிக்கை வைத்தனர்.