ரூ.1 லட்சத்தை இழந்த விவசாயி
ரூ.1 லட்சத்தை இழந்த விவசாயிpt desk

கிருஷ்ணகிரி | இழந்த ரூ10 ஆயிரத்தை மீட்க ரூ.1 லட்சத்தை இழந்த விவசாயி – நடந்தது என்ன?

போன் பே-யில் அனுப்பிய 10 ஆயிரம் ரூபாயை மீட்கும் முயற்சியில் 1 லட்சம் ரூபாயை இழந்த விவசாயி போலீசார் என்று நம்பி ஏமாற்றமடைந்த சம்பவம். டந்தது என்ன விரிவாக பார்க்கலாம்....
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே பி.முதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (46), . இவர், தன் நண்பரான பட்டவாரப்பள்ளி சீனிவாசன் (35), என்பவரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதையடுத்து கடந்த 25ம் தேதி போன்-பே வாயிலாக ரூ.10 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். அப்போது, மாறுதலாக வேறொரு நபருக்கு அந்ப் பணம் அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அந்த நபர் போனை எடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து பாகலூர் போலீசுக்கு திம்மராயப்பா தகவல் தெரிவித்தார். அவர்கள், 1930 என்ற எண்ணில் புகார் செய்ய கூறியுள்ளனர். இந்நிலையில், அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, போலி, கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் சென்றது. எதிர் தரப்பில் பேசிய விஜயகுமார் என அறிமுகம் செய்து கொண்ட நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறினார்.

ரூ.1 லட்சத்தை இழந்த விவசாயி
பொள்ளாச்சி | திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவி குத்திக் கொலை - இளைஞர் காவல் நிலையத்தில் சரண்!

இதையடுத்து திம்மராயப்பா எண்ணுக்கு தனது அடையாள அட்டையை அனுப்பினார். திம்மராயப்பாவின் வங்கிக் கணக்கு, ஆதார் எண் போன்ற விபரங்களை பெற்றுக் கொண்ட போலி போலீஸ் அதிகாரி, வங்கி விபரங்களை சரிபார்ப்பதாகக் கூறி ஒரு எண்ணை கொடுத்து, அதற்கு 1 ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். திம்மராயப்பாவும், 1 ரூபாயை, 'போன் பேவில் அனுப்பினார். அப்போது, அடுத்த நாள் உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து விடும் எனக் கூறி, திம்மராயப்பாவிடம் அந்த நபர் கூறினார்.

ஆனால், பணம் வராத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் போன் செய்து, ஒரு மொபைல் போன் எண்ணை கொடுத்து, 4,999 ரூபாய் மற்றும் 95,000 ரூபாய் என, இரு முறை திம்மராயப்பாவிடம் இருந்து, கூகுள் பே வாயிலாக, அந்த நபர் பணத்தை பெற்றார். அப்போது, நீங்கள் எங்களுக்கு அனுப்பிய, 1 லட்சம் ரூபாய், வேறொரு எண்ணுக்கு தவறுதலாக அனுப்பிய, 10,000 ரூபாய் சேர்த்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து விடும் எனக்கூறி, அந்த நபர் போனை துண்டித்தார்.

ரூ.1 லட்சத்தை இழந்த விவசாயி
கமல் விவகாரம் | ”அரசியலாக்க வேண்டாம்; நாம் அண்டை மாநிலத்தவர்கள்” - டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்!

ஆனால், பணம் வராததால் மீண்டும், 1930 என்ற எண்ணிற்கு திம்மராயப்பா போன் செய்தார். அப்போது தான், சரியான சைபர் கிரைம் எண்ணுக்கு போன் சென்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திம்மராயப்பா, அவர்களிடம் கூறியுள்ளார் இதையடுத்து அவர்கள் ஒரு எண்ணை கொடுத்து கிருஷ்ணகிரி சைபர் க்ரைம்க்கு சென்று புகார் அளிக்கவும் தெரிவித்துள்ளார் அவர்களின் அறிவுரையின் பேரில். கிருஷ்ணகிரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சன் பிள்ளைகளின் கல்வி செலவுக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை பறி கொடுத்த தவிக்கிறார் விவசாயி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com