dog biteFB
தமிழ்நாடு
திருவண்ணாமலை| ரேபிஸ் நோயால் விவசாயி உயிரிழப்பு!
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Summary
திருவண்ணாமலையில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுசாணிப்பூண்டியைச் சேர்ந்த விவசாயிஜான் ஆண்ட்ரூஸ் என்பவரை, சிலமாதங்களுக்கு முன்பு நாய் கடித்தும்,சிகிச்சை பெறாமல் காலம் தாழ்த்திவந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென உடல்நலம்பாதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டபோது, அவருக்கு ரேபிஸ்நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்தசூழலில் ரேபிஸால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாய்க்கடிமுகநூல்
திருவண்ணாமலையில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 10,479 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.