\
சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னை மெட்ரோ ரயில்கள்முகநூல்

கனமழை எச்சரிக்கை | அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக இயக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில்கள்!

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
Published on

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில், கனமழை நேரத்தில், சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்கும்வகையில், கூடுதலாக மெட்ரோ ரயில் சேவைகளை அளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த 3 நாள்களிலும், அனைத்து ரயில் முனையங்களில் இருந்தும், காலை 5 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை புறப்படும் என்றும், இரவு 11 மணிக்கு கடைசி மெட்ரோ ரயில் சேவை புறப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்கள்
சென்னை | கனமழை எச்சரிக்கை.. அரசின் முன்னேற்பாடுகள் முதல் மக்கள் செய்ய வேண்டியவை வரை

முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக, தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள பரங்கிமலை, அரும்பாக்கம் உள்ளிட்ட மெட்ரோ நிலையங்களில், அடுத்த 3 நாள்களுக்கு பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com