4 - 9ஆம் வகுப்பு பாடத்தேர்வுகளில் மாற்றம்?

தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
பாடத்தேர்வு
பாடத்தேர்வுrepresentative image

தமிழ்நாட்டில் 4 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரம்ஜான் பண்டிகையையொட்டி தேர்வுகளை ஒத்திவைக்க சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாடத்தேர்வு
எவர் ஒட்டுக் கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு நின்றுதான் கேட்க வேண்டும் - சீமான்

அதன்படி ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ஆம் தேதிக்கும்,ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கும் மாற்றப்பட்டுள்ளது. எனவே, புதிய அட்டவணையின்படி தேர்வை நடத்திடுமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com