எவர் ஒட்டுக் கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு நின்றுதான் கேட்க வேண்டும் - சீமான்

இந்தியா முழுக்க எவர் ஒட்டுக் கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
சீமான், மைக் சின்னம்
சீமான், மைக் சின்னம்pt web

செய்தியாளர்: T. நவநீதகணேஷ்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளக்கோட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கௌசிக்கிற்கு ஆதரவாக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார். அப்போது பேசிய அவர்...

PM Modi
PM Modiபுதிய தலைமுறை

நீட் என்பதை வேறு எங்கேயாவது போய் நீட்டு என துணிவோடு சொல்ல இங்கு ஒரு ஆண்மகன் இல்லை. இங்கு எல்லோருடைய கைகளும் கரை படிந்த கைகள் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து அனைவரும் கைகட்டி நிற்கிறார்கள். ED ரெய்டு, IT ரெய்டு, NIA ரெய்டு என எதற்கும் அஞ்சாமல் நாங்கள் தனியாக நிற்கிறோம். எங்கும் கருணாநிதி எதிலும் கருணாநிதி என நிறுவியது தான் இந்த மூன்றாண்டு திராவிட ஆட்சியின் சாதனை.

பிஜேபி இந்தியாவையே பத்தாண்டுகள் ஆண்ட கட்சி 22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சி பெரிய கட்சி. ஒரு சின்னப் பையன் சீமானை பார்த்து அவன் சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய். கூட்டத்தில் யாராவது ஒருவர் உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய் எனப் பொருள் ஒரு கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து விட்டாய் எனப் பொருள். நாங்கள் வளர்ந்து விட்டோம் அதனால் நடுங்குகிறாய். அந்த பயம் எல்லாருக்கும் இருக்க வேண்டும். சின்னத்தை எடுத்து விட்டதாக நினைப்பார்கள். ஆனால் இன்று என் சின்னத்தில் தான் நீ ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய்.

Fisherman
Fishermanpt desk

கச்சத்தீவை மீட்பது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும் நெய்தல் படையை உருவாக்குவேன் அதில் மீனவனுக்கு மட்டுமே வாய்ப்பு. மீனவன் பெட்ரோலை கொண்டு போகிறானோ இல்லையோ கையில் கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்களை கொடுத்து விடுவேன். அதை கையில் வைத்துக் கொள் உன்னை தொட்டால், இன்டர்நேஷனல் இஸ்யூ ஆக்கு மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன். கேரளாவில் இருந்து எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை யாரும் பிடிப்பதில்லை அதை ஏன் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வரும். அது ஏனென்றால் அவர்கள் உண்மையில் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள்.

இந்த நாட்டை ஆள்வதற்கு ஒருவர் கூடவா இல்லை இதற்கு மோடி வரவேண்டுமா, ராகுல் வர வேண்டுமா. காவிரியில் தண்ணீர் வாங்கித் தர துப்பில்லாத உனக்கு எதற்கு தமிழரின் ஓட்டு. இது தன்னலம் என்று நினைத்தால் நான் ஏன் கூட்டணி வைத்திருக்கக் கூடாது. கூட்டணி வைத்தவர்களுக்கு எல்லாம் சின்னம் கிடைக்கிறதே. ஜிகே.வாசனுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கிறது, ஐயா டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்கிறது. எங்களுக்கு மட்டும் ஏன் மைக் கிடைக்கிறது எந்த சின்னம் கேட்டாலும் கிடைக்கவில்லை.

சீமான்
சீமான் PT WEB

இந்தியா முழுக்க எவர் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும். எங்களுக்கு மைக் சின்னத்தில் வாக்கு செலுத்துங்கள் என்று சீமான் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com